திருப்பதி கோவிலில் தமிழக அறநிலையத்துறை ஆணையரை அனுமதிக்க மறுப்பு.. கோபத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்த செயல்!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2024, 10:58 am

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஆணிவாரா ஆஸ்தானம் முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து மங்கள பொருட்கள் சமர்ப்பணத்தின் போது 10 பேர் கோவிலுக்குள் செல்ல அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்திருந்த அனைவரும் சேகர்பாபுவுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று விட்டனர். இணை ஆணையர் மாரியப்பன் மட்டும் வெளியில் நின்று விட்டார்.

அதனை தொடர்ந்து அவர் உள்ளே செல்ல முயற்சி எடுத்தபோது உங்கள் ஆட்கள் அனைவரும் சென்று விட்டனர் எனவே உங்களை அனுமதிக்க இயலாது என்று ஊழியர்கள் கூறி விட்டனர்.

இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பனை அனுமதித்தால் தான் நான் உள்ளே செல்வேன் சேகர் பாபு கறார் காண்பித்து இறையாணையர் மாரியப்பன் கோவிலுக்கு உள்ளே செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Archana and Arun love story காதலர் தினத்தில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் அர்ச்சனா…வைரலாகும் வீடியோ.!