அரையாண்டு தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு திட்டம்?…அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்…!!

20 October 2020, 5:58 pm
school_reopen_updatenews360
Quick Share

தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கை அடுத்து கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதால் அதற்கான தேதியை நிர்ணயம் செய்வதோடு அவர்களுக்கு உரிய பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டி உள்ளது.

Pondy School Open- Updatenews360

இந்நிலையில் முன்னெச்செரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் இது குறித்து மாநில அரசுகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, கொரோனா பரவல் அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்திருப்பதால் அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய அதிகாரிகள் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த முறையான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 16

0

0