குடியரசு தின விழா சாகச நிகழ்ச்சியில் ரபேலின் ‘வெர்ட்டிக்கல் சார்லி’ : ஆர்வத்தை தூண்டிய இந்திய ராணுவத்தின் அறிவிப்பு..!!

23 January 2021, 6:55 pm
Rafael Plane - updatenews360
Quick Share

குடியரசு தின விழாவின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் ரபேல் விமானத்தின் சாகசங்களும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 74வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி அனுசரிக்கப்பட இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டு மருத்துவக் கட்டுப்பாடுடன் குடியரசு தினம் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக குடியரசு தின விழாவின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒருவர் தோள் மீது மற்றொருவர் ஏறி அமர்ந்து சாகசம் செய்வது தவிர்க்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு வீரருக்கும் இடையே தனிமனித இடைவெளியுடன் அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, வழக்கமாக அணிவகுப்பில் பங்கேற்கும் வீரர்களை 40% குறைந்த வீரர்களை மட்டுமே கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியரசு தின விழா அணிவகுப்பில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இடம்பெறும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதாவது, பினாகா ஏவுகணை ஏவும் அமைப்பு, பீஷ்மா பீரங்கிகள், பிஎம்பி-2 மற்றும் டி-90 ரக பீரங்கிகள், தற்காலிக பாலம் அமைக்கும் எந்திரம், பிரமோஸ் ஏவுகணைகள், மின் அணு போர் ஆயுதமான சம்விஜய், வான்பாதுகாப்பு ஆயுதம் போன்றவை அணிவகுப்பில் பங்கேற்கச் செய்யப்பட இருக்கிறது.

மேலும், குடியரசு தின விழாவின் சாகச நிகழ்ச்சியில் முதன்முறையாக ரபேல் போர் விமானங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், வெர்ட்டிக்கல் சார்லி எனப்படும் சாகசத்தில் முதல்முறையாக ரபேல் விமானங்கள் ஈடுபடுவதாகவும் மேஜர் ஜெனரல் அலோக் கேகர் தெரிவித்தார்.

Views: - 8

0

0