பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் : முதலமைச்சர் ஸ்டாலின்

22 June 2021, 3:30 pm
stalin cm - updatenews360
Quick Share

சென்னை : பட்ஜெட் கூட்டத் தொடரின் போது வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்ததும் 16வது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் மீதான விவாதம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :- வேளாண் சட்டங்களை ஆரம்பம் முதல் இருந்தே எதிர்த்து வருகிறோம். ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்து வருவதால், தற்போதைய கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது.

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அதோடு, குடியுரிமை திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானமும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும், எனக் கூறினார்.

Views: - 140

0

0