தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்என் ரவி : புத்தகங்களை பரிசாக வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!!

Author: Babu Lakshmanan
18 September 2021, 11:10 am
governor - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி பதவியேற்றுக் கொண்டார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி நேற்று சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் 25-வது ஆளுநராக ஆர்.என். ரவி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பூங்கொத்து கொடுத்து ஆளுநருக்கு வாழ்த்து கூறினார்.

Views: - 334

0

0