தனியார் நிதி நிறுவனத்தில் கைவரிசை: துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை..!!
22 January 2021, 12:41 pmகிருஷ்ணகிரி: ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் புகுந்த மர்மநபர்கள் 4 பேர் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே பாகலூர் சாலையில் தனியார் நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று செல்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை நிறுவனத்திற்கு முதலில் 2 ஊழியர்களும் , அவர்களை தொடர்ந்து அடுத்தடுத்து ஊழியர்களும் வந்துள்ளனர். அப்போது, அங்கு திடீரென துப்பாக்கிகளுடன் மர்மநபர்கள் 5 பேர் நுழைந்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த மர்மநபர்கள், மேலாளர் உள்பட 4 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி, ரூ.7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
0
0