உருவானது போர் பதற்றம்..! ஈராக்கில் அமெரிக்க ராணுவ தளம் மீது அதிரடி ஏவுகணை தாக்குதல்…!

14 February 2020, 8:57 am
Quick Share

பாக்தாத்: ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படை தளம் மீது அதிகாலை நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே கடந்த மாதம் அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டின் புரட்சி படை தளபதி காசிம் சுலைமானி, ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய தளபதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, ஈரான் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்றன. சுலைமானி மரணத்திற்கு பதிலடி உண்டு என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறி வைத்து தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் உள்ள அமெரிக்க படை தளத்தை குறி வைத்து இன்று அதிகாலை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் குழு கைவரிசையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காசிம் சுலைமாணி கொல்லப்பட்டு இன்றுடன் 40வது நாள் ஆகிறது.

எனவே அதற்கான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்னர். ஏவுகணை தாக்குதல்களால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது.

Leave a Reply