ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு : உதவி ஆணையர் உள்பட 6 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்..!

3 September 2020, 12:34 pm
rowdy shankar encounter - updatenews360
Quick Share

சென்னை : ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்த வழக்கு தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் உள்பட 6 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியும், கஞ்சா வியாபாரியுமான சங்கரை, கடந்த 21ம் தேதி அதிகாலை போலீஸ் என்கவுண்டனர் செய்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், ரவுடி சங்கரின் இறப்பில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவிதது வந்தனர். பின்னர், போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வழகாட்டுதலின் பேரில் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்தது தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்தது தொடர்பான வழக்கு தொடர்பாக வரும் 7ம் தேதி எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் உள்பட 6 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.

Views: - 10

0

0