நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளக்கூறி இளம்பெண்ணுக்கு அடி, உதை : ரவுடியின் டார்ச்சர் வீடியோ!!

By: Udayachandran
15 September 2021, 12:05 pm
rowdy Torture Teen Girl -Updatenews360
Quick Share

ஆந்திரா : நண்பனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளக் கூறி இளம் பெண்ணை கடுமையாக தாக்கிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் ராமகோட்டியில் ரவுடி ஒருவன் இளம்பெண் ஒருவரை அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் நான்கு நாட்களுக்கு முன்னதாக நடந்தது என்று கூறப்படும் இந்த காட்சியில் பாதிக்கப்பட்ட பெண் இதுவரை காவல்நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கவில்லை. ஆனால் நண்பருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய ரவுடியை அதனை வீடியோ எடுத்து வேறு ஒருவருக்கு பகிர அது தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நெல்லூர் போலீசார் வீடியோ காட்சி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து வீடியோவில் உள்ள பாதிக்கப்பட்ட பெண், அந்த பெண்ணை அடித்து துன்புறுத்திய ரவுடி ஆகியோர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 309

2

0