அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி மோசடி : திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஆஜர்!!

9 November 2020, 12:56 pm
KArur Senthil Balaji - updatenews360
Quick Share

சென்னை : போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.62 கோடி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி சென்னை மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜரானார்.

2011 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி. அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சுமார் 80க்கும் மேற்பட்ட நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில், ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து செந்தில்பாலாஜி, சகாயராஜன், பிரபு, அன்னராஜ் ஆகிய நான்கு பேர் மீது நம்பிக்கை மோசடி, கொலைமிரட்டல், எமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், ரூ.1.62 கோடி பணம் வாங்கி மோசடி செய்த வழக்கிற்காக திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி சென்னை மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

Views: - 21

0

0