மேலும் ரூ.10,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து : முதலீடுகளை குவிக்கும் தமிழக அரசு..!!!

12 October 2020, 1:20 pm
eps- inaugurate updatenews360
Quick Share

சென்னை : 14 தொழில் நிறுவனங்களுடன் ரூ.10,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

கொரோனா காலத்திலும் கூட தமிழகத்தில் பல்வேறு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன்பலனாக, இரண்டாவது காலாண்டில் ரூ. 23 ஆயிரத்து 332 கோடி அளவு முதலீட்டில் 132 திட்டங்களை ஈர்த்துள்ளது. இது தொடர்பான செய்தியை அண்மையில் வெளியிட்ட ‘ப்ரொஜெக்ட் டுடே’ நிறுவனம், தமிழ்நாடு அரசு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருக்கிறது என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ரூ.10,000 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள 14 தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம், தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 34

0

0