HDFC வாடிக்கையாளர்கள் 100 பேரின் கணக்குகளுக்கு ரூ.13 கோடி பணம் வரவு : குழப்பத்தில் வங்கி… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 5:23 pm
HDFC - Updatenews360
Quick Share

வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு தலா 13 கோடி ரூபாய் பணம் வங்கியில் இருந்து அனுப்பபப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலை சந்திப்பில் HDFC வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் வங்கியில் இருந்து தலா 13 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே வங்கி அதிகாரிகள் பணம் சென்ற வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்தனர். தொழிற்நுட்ப கோளாறு காரணமாக இந்த பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருக்கலாமா? அல்லது வங்கி இணையதளத்தை யாராவது முடக்கி விட்டார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது 100 பேர் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாக தவறுதலாக குறுஞ்செய்தி அனுப்பட்டதாக ஹெச்டிஎஃப்சி விளக்கம் அளித்துள்ளது.

தவறுதலாக குறுஞ்செய்தி சென்றதே தவிர வங்கி கணக்கிற்கு பணம் செல்லவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் வாடிக்கையாளர் பணத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, யாரும் குழப்பமடைய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 640

0

0