ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது.. அமலாக்கத்துறையினர் அதிரடி : அரசியலில் பரபரப்பு!!!
ஆம் ஆத்மி மாநிலம் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் மஜ்ராவை அமலாக்கத்துறை இன்று (திங்கள்கிழமை) கைது செய்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 41 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் வீடு உட்பட மூன்று இடங்களில் சிபிஐ சோதனை நடத்தினர்.
சோதனையில், 16.57 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு பணம் மற்றும் வங்கி மற்றும் சொத்து ஆவணங்கள் கிடைத்ததாக சிபிஐ குறிப்பிட்டு இருந்தது.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி,அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று பொதுக்கூட்டத்தில் வைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜஸ்வந்த் சிங் கஜ்ஜனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகையில், இந்த கைது நடவடிக்கை எங்களை இழிவுபடுத்துவதற்கான சதி என்றும், ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன் ஆம் ஆத்மி கட்சியில் சேர்வதற்கு முன்பு இருந்து இந்த பிரச்சனை இருக்கிறது.
ஆனால் பாஜகவுக்கு எங்களை இழிவுபடுத்துவது தான் நோக்கம் அதனால் தான் பொதுக்கூட்டத்தின் போது அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. ஆம் அத்மியின் செய்தி தொடர்பாளர் மல்விந்தர் காங் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.