ஊரக உள்ளாட்சி தேர்தல் : பந்தயத்தில் முந்திச் செல்லும் அதிமுக : இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 6:25 pm
Admk Ready - Updatenews360
Quick Share

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வரும் அக்.6 மற்றும் 9ஆம் தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் செப்.15 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Bijoy Ghosh on Twitter: "Scene outside the AIADMK office as counting begins  for the TN Assembly election results in Chennai. @businessline  @AIADMKOfficial… https://t.co/S5MddtzbiT"

வரும் செப்.22 ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், செப் 23 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், செப்.25ஆம் தேதி வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

Views: - 209

0

0