விஷூ பண்டிகை வழிபாடு…சபரிமலை நடை இன்று திறப்பு: நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி..!!

Author: Rajesh
10 April 2022, 3:48 pm
Quick Share

சபரிமலை: சித்திரை விஷு பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது

சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து மூலவருக்கு விளக்கேற்றிய பின், 18ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்ப்பார்.

வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லாததால், இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் துவங்கும். வரும் 15ல் விஷு கனி தரிசனம் நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு நடை திறந்ததும், பக்தர்கள் காய், கனி அலங்காரத்தில் அய்யப்பனை தரிசிக்க முடியும்.

வரும் 18 இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல், வரும் 18 வரை ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

Views: - 945

0

0