உங்க படத்த பார்க்கும் போது வர Feel-ஏ வேற தலைவா… சூப்பர் ஸ்டார் ரஜினுக்கு சச்சின் வாழ்த்து..!!

Author: Babu Lakshmanan
26 October 2021, 4:05 pm
rajini - sachin - udpatenews360
Quick Share

டெல்லி : தேசிய விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

67வது தேசிய விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில், கலைத்துறையில் சிறந்த ங்காற்றியதற்காக திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். இந்த விருதை எனது குருவும், ஆலோகருமான கே. பாலச்சந்தருக்கு சமர்பிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

இதையடுத்து, தேசிய விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;- ஒரு சில நடிகர்கள் மட்டுமே ஒவ்வொரு முறையும் அவர்களின் படம் வெளியாகும் போது ஒரு குறிப்பிட்ட அதிர்வலையை உருவாக்குவார்கள். தலைவா…. ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அவரது கடின உழைப்பால் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 459

0

0