நடிகை பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆஜராக சம்மன்

Author: Udhayakumar Raman
25 November 2021, 11:20 pm
manikandan - updatenews360
Quick Share

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடைப்படையில் மணிகண்டன் கைது வழக்கு பதிவு செய்தது. பின்னர், போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பின் மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு கடந்த ஜூலை 7ஆம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகை கடந்த 25 ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்தப் புகாரில் ஏற்கனவே மணிகண்டன் மீது 2 வழக்குகள் இருந்த நிலையில், 342, 352 ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்த்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி 4 ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Views: - 127

0

0