எடப்பாடி பழனிசாமி உள்பட 1500 பேர் மீது வழக்குப்பதிவு : தடையை மீறி போராட்டம் நடத்தியதாக போலீசார் நடவடிக்கை..!!

Author: Babu Lakshmanan
29 July 2021, 12:30 pm
Quick Share

சென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்து நேற்று அதிமுக போராட்டம் நடத்திய நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட 1500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை திமுக வெளியிட்டது. இந்தத் தேர்தலிலும் திமுக மாபெறும் வெற்றியைப் பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்களை நெருங்கி வரும் வேளையில், தேர்தல் வெற்றிக்கு காரணமான கோரிக்கைகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

eps 1-updatenews360

இதனிடையே, அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அவரவர் வீடு முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சேலத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அதிமுகவினர் மீது சேலம் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 1500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Views: - 247

0

0