சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திடீரென்று வைக்கப்பட்ட நோ என்ட்ரி போர்ட்: பக்தர்கள் நுழையவும் தடை: என்ன நடந்தது..!?
Author: Sudha3 August 2024, 12:03 pm
தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் சிறப்பு மிக்க தலமாக விளங்குவது திருச்சி மாநகரில் அமைந்துள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு செல்லும் நால்ரோடு பகுதியில் கோயிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் சிமெண்ட் மற்றும் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வரவேற்பு வளைவு உள்ளது.
நேற்றிரவு நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று நுழைவாயிலின் வழியே வந்துள்ளது.லாரியில் அதிக அளவு மூட்டைகள் அடுக்கப் பட்டிருந்ததால் மூட்டைகள் தூணின் மீது மோதியுள்ளது இதனால் இரண்டு பக்கவாட்டு தூண்களில் ஒரு தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது,மற்றும் மேற்புற வளைவிலும் விரிசல் விழுந்தது.வளைவு எந்த நேரத்திலும் இடித்து விழலாம் என்னும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சமயபுரம் போலீசார் விரைந்து வந்தனர். பேரிகார்டு வைத்து அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு நுழைவாயில் உள்ளே கனரக வாகனங்கள் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தூணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.ஆடி மாதத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு அம்மன் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0