திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்…!!
17 November 2020, 10:13 amQuick Share
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தனது குடுப்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். அங்கு முதலமைச்சர் பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இரவு 7மணிக்கு வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோயிலிலும் முதலமைச்சர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
அத்துடன் இன்று அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் கலந்து கொண்டு முதலமைச்சர் பழனிசாமி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.