அடேங்கப்பா… ரூ.1,000 கோடியா… மீண்டும் வரி ஏய்ப்பு செய்த சரவணா ஸ்டோர்ஸ் : இதுதா உங்க பெஸ்ட்டு… பெஸ்ட்டு… பெஸ்ட்டா…!!!

Author: Babu Lakshmanan
7 December 2021, 1:43 pm
Quick Share

சென்னை : பிரபல நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடி வருவாயை மறைத்திருப்பது வருமான வரித்துறையினரின் சோதனையில் அம்பலமாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனங்களில் வரிஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து ஐடி அதிகாரிகள் சோதனை நடத்திய சோதனையில் சுமார் 434 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து மீண்டும் வரி ஏய்ப்பு காரணமாக சென்னை, மதுரை உள்ளிட்ட சரவணா ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான இடங்களில் கடந்த 1ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தனர். சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் தொடர்புடைய 37 இடங்களில் நடத்திய சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடி வருமானத்தை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆடைகள் மற்றும நகைகள் கொள்முதல் செய்ததில் ரூ.150 கோடி மறைக்கப்பட்டுள்ளதாகவும், போலியான விற்பனை ரசீதுகளை உருவாக்கி ரூ.80 கோடி வருவாயை மறைத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சோதனையின் போது ரூ.10 கோடி ரொக்கமும், ரூ. 6 கோடி மதிப்பிலான நகைகளையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தற்போது, சரவணா ஸ்டோரின் உரிமையாளர் அருள் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், அவரது நிறுவனத்திற்கு விளம்பரங்களிலும் அவரே நடித்து வருகிறார். இந்த நிலையில், ரூ.1,000 கோடி வருவாயை மறைத்திருப்பதை வைத்து, அவரை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Views: - 230

0

0