தன்னை பற்றி விபரங்களை 3வது நபர்களுக்கு கொடுக்க தடா…! சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்..!

24 September 2020, 1:27 pm
V K Sasikala leaves after attending the party's MLA's meeting

Chennai: AIADMK General Secretary V K Sasikala after attending the party's MLA's meeting in which she was elected as a AIADMK Legislative party leader, set to become Tamil Nadu CM, at Party's Headquarters in Chennai on Sunday. PTI Photo by R Senthil Kumar(PTI2_5_2017_000104B)

Quick Share

பெங்களூரூ : தன்னைப் பற்றிய விபரங்களை 3வது நபர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று கர்நாடகா சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு முதல் சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையாவார் என கர்நாடகா சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த தகவலை பெங்களூரூவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியைத் தொடர்ந்து பதில் அளிக்கப்பட்டது.

ஆனால், சசிகலா இந்த மாதம் இறுதிக்குள் வெளியே வர இருப்பதாகவும், அபராதத் தொகை ரூ. 10 கோடி செலுத்தினால் விடுதலை செய்யப்படுவார் என்றும், அதற்கான தொகையை திவாகரனும் செலுத்தி விட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தன்னைப் பற்றிய தகவல்கள் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா சிறைத்துறையினருக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தனது சிறைவாசம் மற்றும் விடுதலை தொடர்பான விவரங்களை 3வது நபர்களுக்கு தெரிவிக்கக் கூடாது என வலியுறுததியுள்ளார்.

இதனால், சசிகலாவுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறித்த தகவலை வெளியிட கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.