சசிகலாவின் திடீர் உடல்நலக்குறைவுக்கு பின்னணியில் மர்மம்…. வழக்கறிஞர் ராஜராமன் பகீர் தகவல்..!!!

23 January 2021, 1:56 pm
sasikala - updatenews360
Quick Share

சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை கோளாறு குறித்து அவரது வழக்கறிஞர் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 27ம் தேதி அவர் விடுதலையாக உள்ள நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருமுறை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், அவருக்குள்ள தைராய்டு, ரத்தக் கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில், சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் மற்றும் அதிதீவிர நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சசிகலாவின் திடீர் உடல்நலக்குறைவின் பின்னணியில் உள்ள மர்மங்களை அவரது வழக்கறிஞர் ராஜராமன் விளக்கியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :- மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகையில் சசிகலாவிற்கு கொரோனா தொற்று இல்லை. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகே, அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சிறையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போது, ஒரு வாரத்திற்கு பிறகே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதற்கு பிறகே, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஸ்கேன் வசதி உள்ளிட்ட முக்கிய மருத்துவ வசதிகள் இல்லாத மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சசிகலாவின் விருப்பத்திற்கேற்ப தனியார் மருத்துவமனையல் சிகிச்சைக்காக அனுமதிக்கவில்லை. சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் சந்தேகத்தை கொடுக்கிறது, எனத் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலயுறுத்தி கர்நாடகா உள்துறை செயலருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் சசிகலாவின் வழக்கறிஞர் கூறினார்.

Views: - 0

0

0