சசிகலா கட்டி வரும் புதிய வீட்டிற்கும் ‘செக்’ வைத்த வருமான வரித்துறை : அதிர்ச்சியில் மன்னார்குடி குடும்பத்தார்..!

2 September 2020, 1:43 pm
sasikala IT raid - updatenews360
Quick Share

சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா கட்டி வரும் புதிய வீட்டில் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் சசிகலா பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்களில் விடுதலையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதன் அடிப்படையில், அண்மையில் சசிகலாவுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கினர்.

பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சசிகலாவின் 65 சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இந் நிலையில், சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இது சசிகலாவின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 5

0

0