சசிகலாவுக்கு கொரோனாவெல்லாம் இல்ல… நல்லா இருக்காங்க : பெங்களூரூவில் டிடிவி தினகரன் தகவல்…!!!
21 January 2021, 11:40 amபெங்களூரூ : சசிகலாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏதும் இல்லை என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 27ம் தேதி அவர் விடுதலையாக உள்ள நிலையில், திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பெங்களூரூ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை பார்க்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூரூ சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார். யாரும் அச்சப்பட தேவையில்லை. சசிகலாவுக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்துள்ளது. இதனால், அவருக்கு தற்போது ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும்பட்சத்தில் அவருக்கு சிடி ஸ்கேன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர், என்றார்.
0
0