‘சசிகலாவா… வாய்ப்பே இல்ல’ : தலைநகரில் காலரை தூக்கிய எடப்பாடியார்…!!

19 January 2021, 4:53 pm
CM edappadi palanisamy - updatenews360
Quick Share

டெல்லி : சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்பு 100 சதவீதம் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்ளை சந்தித் பேசியுள்ளார். முதலமைச்சரின் இந்தப் பயணம் தமிழக அரசியலில் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது :- சசிகலாவின் வருகையால் எந்தவித மாற்றமும் அதிமுகவில் நிகழப்போவதில்லை. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும், அதிமுகவில் அவர் 100 சதவீதம் சேர்க்கப்படமாட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் சசிகலா.

தமிழகத்தில் நிறைவு பெற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு விடவும், வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடியை தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். அவரும் எனது அழைப்பை ஏற்றுக் கொண்டு தமிழகம் வருவதாக உறுதியளித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை, எனத் தெரிவித்தார்.

Views: - 0

0

0