ஜெ., நினைவிடத்தில் மீண்டும் சபதம்..? மனதில் இருப்பதை சொல்லிவிட்டேன்… அம்மா பார்த்துக் கொள்வார்.. மெரினாவில் கண்ணீர் சிந்திய சசிகலா..!!
Author: Babu Lakshmanan16 October 2021, 12:36 pm
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் களமிறங்கினார். அதாவது, கட்சி நிர்வாகிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விரைவில் கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, அதிமுக பொன்விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமயிலான கட்சி நிர்வாகிகள் தடபுடலாக மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக கொடி கட்டிய காரின் மூலம் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா நினைவிடங்களில் சசிகலா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்தியபடி, சில நிமிடங்கள் குனிந்து மனதிற்குள் மீண்டும் சபதம் எடுத்துக் கொண்டது போல பிரார்த்தனை செய்தார். அவரது வருகையையொட்டி ஏராளமான தொண்டர்களும் அங்கு திரண்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ” அதிமுகவை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் காப்பாற்றுவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தியதன் மூலம் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்து விட்டேன்,” எனக் கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வந்த பிறகு, முதல்முறையாக ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செலுத்த சசிகலா முடிவு செய்துள்ளார். தொடர்ந்து, நாளைய தினம் தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லமான, ராமாபுரம் தோட்ட இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து, எம்ஜிஆர் வாய் பேசாத காது கேளாதோர் பள்ளியில் மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிடவும் திட்டமிட்டுள்ளார்.
0
0