சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி : அமமுகவின் மனுவை நிராகரித்தது காவல்துறை..!!

6 February 2021, 11:14 am
Sasikala Admit- Updatenews360
Quick Share

சென்னை : சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கேட்டு அமமுக சார்பில் அளிக்கப்பட்ட மனுவை சென்னை காவல்துறை நிராகரித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து விடுதலையாகியுள்ளார் சசிகலா. உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெங்களூரூவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். அவர் நாளை மறுநாள் சென்னை வர இருக்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அமமுகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அவர் வரும் வழிநெடுகிலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஆட்டம், பாட்டத்துடன் கூடிய வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னையில் மட்டும் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும், சசிகலா தலைமையில் ஆயிரம் பேர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி கோரியும் சென்னை காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், அமமுகவின் இந்த மனுவை நிராகரித்து சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஏற்கனவே, அதிமுக கொடியை சட்டவிரோதமாக சசிகலா தரப்பினர் பயன்படுத்தி வருவதாகவும் அதிமுகவினர் புகார் அளித்தது, அனுமதியில்லாத பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த மனு நிராகரிப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0