ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை?

15 September 2020, 8:40 am
Sasikala - Updatenews360
Quick Share

சிறையில் உள்ள சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விக்கு சிறைத்துறை நிர்வாகம் பதிலளித்துள்ளது. மேலும் அபராதத் தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாத பட்சத்தில் அவர் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி விடுதலையாவார் என தெரிவிக்கப்பட்டுள்து.

மேலும் சசிகலா பரோல் விதியை பயன்படுத்தினால் விடுதலை தேதியில் மாறுபடவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டு சிறைத்தண்டனை நிறைவடையும் நிலையில் விடுதலையாகிறார்.

Views: - 10

0

0