ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்குப் பதிவு : நீதிமன்றத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

8 September 2020, 2:01 pm
Jeyaraj FenniX Case - updatenews360
Quick Share

சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பவத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சிறையில் போலீசார் நடத்திய தாக்குதலில் இருவரும் உயிரிழந்தது நாடு முழுவதும் பூதாகரமாக எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்த வழக்கில் தாமே முன் வந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து சிபிஐக்கு மாற்றப்பட்ட பின், வழக்கில் 10க்கும் மேற்பட்ட காவலர்களை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில், கைத செய்யப்பட்ட காவல் ஆயவ்ளர் ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது வரையில் சிறையில் இருப்பதாகவும், உயர்நீதிமன்ற கிளை உத்தரவு படி, சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரித்த நிலையில், சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர், வழக்கில் தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே தடய அறியிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட் நிலையில் விசாரணை முடிவடைந்துள்ளதாக தமக்கு ஜாமீன் வழங்க வேண்டும், அப்படி ஜாமீன் வழங்கினால் தலைமறைவாக மாட்டேன், நீதிமன்ற கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதில் சம்பவம் நடந்த போது கொரோனா பணிக்காக ஸ்ரீதர் வெளியே சென்றதாகவும், இந்த சம்பவத்திற்கும் ஸ்ரீதருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், ஸ்ரீதருக்கு முதுகெலும்பு பிரச்சனை உள்ளதால் உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

ஆனால் சிபிஐ தரப்பு வழக்கறிஞர், சாத்தான்குளம் காவல்நிலையத்தின் பொறுப்பாளராக உள்ள ஸ்ரீதருக்கு, காவல்நிலையத்தில நடக்கும் விஷயங்கள் அவரின் கவனமின்றி நடைபெற வாய்ப்பில்லை, மேலும் இந்த வழக்கு விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என கூறினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணை அதிகாரி, வழக்கு தொடர்பான விசாரணை குறிப்பை நீதிமன்றத்தில் தாக்க செய்ய உத்தரவிட்டு தீர்ப்பினை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Views: - 7

0

0