யூடியூபர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்திலும், தனியார் யூடியூப் சேனல்களிலும் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், செந்தில்பாலாஜி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
சோர்சஸ் என்ற பெயரில் வெளியிட்ட அவரது பல கருத்துகள் மற்றும் முதலமைச்சரின் உடல்நலம் குறித்த அவரது கருத்துகள் திமுகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய கருத்துகளுக்காக சமீபத்தில் தான் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு அபராதம் விதித்திருந்தது. இந்நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலை சவுக்கு சங்கரே வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கரூர் எஸ்பி சுந்தரவதனத்தின் புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் இன்று இரவு கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக எஸ்பியின் புகாரில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு சுந்தரவதனம் தீவிரமாக உதவினார், தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததோடு, உண்மையான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் இரண்டு நாள்களில் வெளியே வர உதவியுள்ளார்.
இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றால், இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையில் சுந்தரவதனத்தின் பெயரும் இடம்பெறும். தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்டதற்கு எதிராக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்கள்கிழமை அன்று விசாரணைக்கு வருகிறது என்று கூறியுள்ளார்.
மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக தவறான தகவலை வெளியிட்டு கடுமையாக விமர்சித்திருந்த பாஜக நிர்வாகி எஸ்ஜி சூர்யா நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளஙக்ளில் இந்த கைது பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், இன்று இரவு கைது செய்யப்பட இருப்பதாக அவர் நேற்று வெளியிட்டுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. வழக்கம் போல ட்விட்டரில் திமுகவை விமர்சிக்கும் ட்விட்டுகளை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.