6 முதல் 8 வரையான வகுப்புகளை திறக்க பரிந்துரை… முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பிப்பு : அச்சத்தில் பெற்றோர்கள்..!!

Author: Babu Lakshmanan
16 September 2021, 1:41 pm
pondy school - updatenews360
Quick Share

சென்னை : முதற்கட்டமாக, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்கலாம் என்ற பரிந்துரை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்.,1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, முதற்கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்றும், ஒரு சிலர் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை திறக்கலாம் என கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று தாக்கல் செய்தார்.

அதில், அக்டோபர் மாதத்தில் இருந்து 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்றும், 2 வாரத்திற்கு இதன் விளைவுகளை பார்த்த பிறகு, 1 முதுல் 5ம் வகுப்புகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை திறப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, இந்த மாத இறுதிக்குள் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழக அரசின் இந்த முடிவு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறந்துள்ள நிலையில், 80க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டுவது ஏன்..? என்றும், 3வது அலை எச்சரிக்கையினால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, பள்ளிகளை திறப்பதில் நிதானமாக ஆலோசித்து முடிவு எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 172

0

2