சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில், சிறுவயது குழந்தையிட்ட முழக்கம் வைரலாகி வருகிறது.
சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போதைய திமுக அரசு தங்களின் கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27ம் தேதி முதல் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கினர்.
தொடக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தனித்தனியே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், முதலமைச்சரை சந்திக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவரின் சிறுவயது மகன், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். வெல்லட்டும், வெல்லட்டும் ஒற்றை கோரிக்கை வெல்லட்டும் என்று அந்த சிறுவன் முழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.