பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது

9 November 2020, 10:57 am
Quick Share

சென்னை : தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது தொடர்பாக பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு நவ.,30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்மையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி, பள்ளிகள் (9,10,11 மற்றும் 12ம் வகுப்பு) கல்லூரிகள் வரும் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் கட்டுக்குள் வந்தாலும், தற்போது பள்ளி, கல்லூரிகளை திறக்க சரியான நேரம் அல்ல என கல்வியாளர்களும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து அனைத்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்கப்படும் என அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாணவர்களின் பெற்றோர்கள் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

Views: - 18

0

0

1 thought on “பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது

Comments are closed.