அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமன வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் : பள்ளிக்கல்வித்துறை

Author: Babu
10 October 2020, 12:07 pm
school education - updatenews360
Quick Share

சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் 44 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 1990ம் ஆண்டு வரை அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு குறிப்பிட்ட வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று வயது வரம்பு நீக்கப்பட்டதால், ஆசிரியர்களின் பணி நியமனத்தில் 57 வயது நிரம்பியவர்கள் கூட சேர்க்கப்பட்டு வந்தனர். இதனால், நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு மட்டும் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும். அதோடு, தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற வேண்டுமெனில், பள்ளி நிர்வாகத் திறன் தேர்விலும் ஆசிரியர்கள் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும்.

இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் வெவ்வேறு பாடங்களை படித்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வும் ரத்து செய்யப்படுகிறது.

Views: - 64

0

0