பீகார் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது…!!

3 November 2020, 8:33 am
bihar election - updatenews360
Quick Share

பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாட்னா: பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியுடன் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில், அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, முதல் கட்ட தேர்தல், கடந்த 28ம் தேதி நடந்து முடிந்தது.

இதற்கான, 2ம் கட் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 மாவட்டங்களில் உள்ள 94 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் 2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரத்து 285 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 கோடியே 50 லட்சத்து 33 ஆயிரத்து 34 பேர். பெண்கள் 1 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர். திருநங்கையர் 980 பேர் உள்ளனர்.

41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,463 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்களில் 1,316 பேர் ஆண்கள், 146 பேர் பெண்களும் உள்ளனர். பீகாரில், 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 7ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 10ம் தேதி நடக்கிறது.

Views: - 20

0

0