திமுக தான் எங்களுக்கு B டீம் : இந்த அடிமைக்கு அந்த அடிமை பரவாயில்லை : திமுகவை பங்கம் செய்த சீமான்!!

Author: Babu Lakshmanan
27 October 2021, 4:54 pm
Seeman Stalin - Updatenews360
Quick Share

சென்னை : ஆளுநர் ஆய்வு விவகாரத்தை ஒப்பிட்டு பார்க்கையில், இந்த அடிமைக்கு அந்த அடிமை பரவாயில்லை என்று தோன்றுவதாக திமுகவை சீமான் கலாய்த்துள்ளார்.

மருது பாண்டியர்களின் 220-வது நினைவு நாளை முன்னிட்டு, அவர்களின் திருவுருவப் படத்திற்கு சின்னப்போருரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ;- வெறும் 8 நாட்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்த சிவாஜியை மாவீரன் என்று அழைக்கிறார்கள். எம் பெரும் பாட்டனார் மருது பாண்டியர்கள் 8 மாதங்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்தார். நம் முன்னோர்களை நினைக்கும் போது திமிரும், பெருமையும் வருகிறது. சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணம் அவரது தனிப்பட்ட முடிவு. இருந்தாலும் அதனை நான் வரவேற்கிறேன்

தமிழர்கள் அனைவரும் இந்துக்கள் என்று சொல்லுகிறார் எச்.ராஜா. பீகாரில் இருக்கும் இந்துக்கள் தமிழர்களா? நான் என்ன மதமாற்றம் செய்ய வந்த கால்டுவெல்லா? இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மதம் மாற வேண்டுமென்று நான் சொன்னால் அவர்கள் மாறிவிடுவார்களா? இத்தனை நாள் சொல்லி எனக்கு ஓட்டே போடுவதில்லை.

அமீரின் கோட்பாடும் என்னுடைய கோட்பாடும் வேறு வேறு. என்னை பற்றிபேச வேண்டிய தேவை இருப்பதால் அமீர் பேசுகிறார். இலங்கையில் பிறந்த பிரபாகரனை இங்கு எப்படி தலைவராக ஏற்றுக்கொள்ளலாம் என அமீர் கேட்கிறார். அரபியாவில் பிறந்த நபிகளை எப்படி நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள்? திமுக என்னுடைய B டீம். என்னை தான் அவர்கள் பின்பற்றுகின்றனர். இந்துவே இல்லை எனக்கூறும் நான் பிஜேபியின் B டீம். கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் எனக்கூறும் திமுக பிஜேபியின் எதிரியா?

முல்லை பெரியாறு அணை விவாகரத்தில் தமிழ் நாடு அரசு உறுதியாக இருக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை தொடர்பாக மலையாள நடிகர்கள் பேசுகையில் தமிழ் நடிகர்களும் பேச வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் நடிகர்கள் இல்லை.

பன்வாரிலால் ஆய்வு செய்வதை அப்போது எதிர்த்த திமுக, தற்போது என்ன செய்யப்போகிறது? கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை ஆளுநர்கள் அமைதியாக இருந்தனர். இந்த அடிமைக்கு அந்த அடிமை பரவாயில்லை என தோன்றுகிறது, எனக் கூறினார்.

Views: - 235

0

0