கடல் ஒன்னும் உங்க சொத்து கிடையாது.. பேனா சிலைக்கு திமுக கூட்டணி கட்சியே எதிர்ப்பு… : எச்சரிக்கும் சீமான்

Author: Babu Lakshmanan
4 February 2023, 5:52 pm
Quick Share

சிவகங்கை: மெரினா கடலில் பேனா சிலையை வைக்க திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- மெரினா கடலில் பேனா சிலை அமைப்பதை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரின் கருத்தை வரவேற்கின்றேன். கடல் கட்சிக்கோ, கட்சியின் தலைமைக்கோ சொந்தமானது அல்ல. கடல் பொது சொத்து.

கடலுக்குள் சிலை அமைப்பதை அறிவார்ந்த சமுகம் செய்யாது. தொலை நோக்கு பார்வையுள்ள தலைவன் சிந்திக்க வேண்டும். பேனா சிலையை அண்ணா அறிவாலயம், அண்ணா நூலகம், கலைஞர் நினைவிட்டத்தில் வைக்கலாம். கடலுக்குள் வைப்பதை அனுமதிக்க மாட்டோம்.

எனது கை பூ பறிக்குமா? புலியங்காய் பறிக்குமா? என்று சேகர் பாபு பழைய வசனங்களை பேசி வருகின்றார். ஈரோடு இடைத்தேர்தலை நாங்கள் வலிமையாக எதிர்கொள்கின்றோம். உறுதியாக வெல்வோம்.

இலங்கை அகதிகள் மீண்டும் இந்தியா வருவது அங்கு தமிழர்கள் வாழமுடியாத சூழல் நிலவுவதை காட்டுகின்றது. திபத்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் அரசு, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர மறுக்கின்றது. இலங்கை பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழ சோசியலீச குடியரசு மலர்வது தான் ஒரே தீர்வு, என தெரிவித்தார்.

Views: - 300

0

0