மேடையில் கண்கலங்கி கதறி அழுத சீமான் : கட்டியணைத்த சகோதரி… நெகிழ்ச்சியில் தொண்டர்கள்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2023, 10:01 pm
Seeman - Updatenews360
Quick Share

தனது சகோதரியின் மகள் நிச்சயதார்த்த விழா மேடையில் கண்கலங்கி நின்ற சீமான் வீடியோ வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் சகோதரி அன்பரசி அவர்களின் மகள் கயல்விழியின் நிச்சயதார்த்த விழா சிவகங்கை நடைபெற்றது.

இந்த விழாவில் தாய் மாமனாக கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மணமக்களை வாழ்த்தி பேச துவங்கிய போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தினார்.

மேடையில் நின்றிருந்த அவருடைய சகோதரி மற்றும் உறவினர்கள் சீமானை அரவணைத்து ஆறுதல் கூறினார்கள்.

இந்த சம்பவம் அந்த திருமண மண்டபத்தில் இருந்த நாம் தமிழர் தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Views: - 163

0

0