பைத்தியகாரனுக்கு பரிதாபப்படுவேன்… பதில் சொல்லமாட்டேன்… எச்.ராஜாவை பொரிந்து தள்ளிய சீமான்..!!

Author: Babu Lakshmanan
29 September 2021, 1:14 pm
h raja - seeman -updatenews360
Quick Share

சீமானின் தாயார் தமிழரா..? இல்லையா..? என்பது குறித்து கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர் எச்.ராஜாவை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சர்ச்சை அரசியல்வாதியாக வலம் வரும் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னை தமிழர் என்று கூறி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் தமிழச்சியா..? மலையாளிதானே என கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எச்.ராஜாவின் கேள்வி தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் சீமான் விளக்கம் அளித்து பேசினார். அவர் பேசியதாவது :- என் தாய் தமிழச்சியா என்று எச்.ராஜா கேள்வி கேட்டுள்ளார். நான் பைத்திக்காரனுக்கு பரிதாபப்படுவேன். ஆனால் பதில் சொல்லமாட்டேன். சட்டப்பேரவை தேர்தலின் போது நீட்டை ரத்து செய்தே தீருவோம் என்று திமுகவைச் சேர்ந்த முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் உறுதி கூறி வந்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.

அதேபோல, எதிர்கட்சியாக திமுக இருக்கும் போது 7 பேர் விடுதலை பற்றி அடிக்கடி பேசினார்கள். ஆனால், தற்போது ஆளுங்கட்சியாக வந்த பிறகு, அதைப் பற்றி நினைப்பது கூட இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்து விட்டால், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவார்களா..?

தமிழக அரசு இதுவரை என்ன திட்டங்களை செய்துள்ளது என நாங்கள் ஒரு வெள்ளை அறிக்கை கொடுப்போம். மத்திய பாஜக அரசு ஏழரை ஆண்டுகளில் என்ன செய்தது என நீங்கள் வெள்ளை அறிக்கையை கொடுங்கள். நாம் தமிழர்கள் நேரடியாக தேர்தலில் மோத கூடாது என திமுகவினர் மிரட்டுகின்றனர். பணம் தருவதாக பேரம் பேசுகிறார்கள். பிறகட்சிகளை திமுகவினர் அச்சுறுத்தக் கூடாது. தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுப்பது குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை. பதவிகளை ஏலம் விட்டால் கடுமையான தண்டனை என தேர்தல் ஆணையம் கூறியும் பதவிகளை ஏலம் விட்டுள்ளனர். அதன் மீது தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை, என்று கூறினார்.

Views: - 242

0

0