கேவலப்படுத்திய சீமான்… கூடிய கூட்டம் : விஜய் எடுத்த அதிரடி முடிவு..நாளை முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2024, 8:13 pm

தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக திமுக மற்றும் அதிமுக மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இந்த கட்சிகளுக்கு எதிராக தொடங்கிய பல கட்சிகள், குறிப்பாக நடிகர்கள் தொடங்கிய கட்சிகள் கடைசியில் அந்த கட்சிகளோடே கூட்டணி வைக்கும் நிலை உருவானது.

தமிழகத்தில் அந்த அளவிற்கு அடித்தளம் அமைத்து உள்ளது திராவிட கட்சிகள். இந்தநிலையில் திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக பெற்று வருகிறார்.
அதனை உதறி தள்ளிவிட்டு அரசியலில் களம் இறங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவர், தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். இதனையடுத்து தனது முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியையும் அறிவித்து திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற மாநாட்டில் பல லட்சம் மக்கள் திரண்டனர். மக்கள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் கொள்கை, கூட்டணி என அதிரடியாக அறிவித்தார்.

குறிப்பாக 2026ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாகவும், தனி மெஜாரிட்டி கிடைக்கும் என கூறினார். மேலும் எங்களை நம்பி கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

அரசியலில் கோபத்தோடு, ஆக்ரஷத்தோடு பேச வேண்டியதில்லையெனவும் கூறினார். மேலும் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்த்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து என தெரிவித்தார்.இதனால் விஜய்யோடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்ட சீமானுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. விஜய் மாநாடு நடத்துவதற்கு முன்பு சீமான் விஜயை பல ரூபங்களில் புகழ்ந்து பேசினார்.

லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் லியோ படத்தில் நடித்த பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், மக்கள்தான் மன்னர்கள், உங்களுக்கு சேவை செய்யும் தளபதிதான் நான். மக்கள் ஆணையிட்டால் செய்து முடிக்கிறேன் என்றார். விஜய்யின் பேச்சு கூடுதலான அரசியல் டச்சுடன் இருந்தது.

அப்போது,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், அரசியல் களத்திற்கு வரும் ஒவ்வொருவரின் நோக்கமும் வெல்ல வேண்டும். வெற்றி பெற வேண்டும், அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற நோக்கம் இருக்கக்கூடாது என்று நாம் சொல்ல முடியாது. தம்பி விஜய்யின் அந்த கனவு வெல்வதற்கு வாழ்த்துவோம்.
தம்பி விஜய்யின் கனவு வெல்ல நான் வாழ்த்துகிறேன். என் அன்பிற்குரிய தம்பி என்பதால் ஒரு அளவுக்கு மேல் பேச முடியாது” எனத் தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜய் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் ஆதரிப்பீர்களா, எதிர்ப்பீர்களா, என்ற கேள்விக்கு, நடிகர் விஜய் நிலைப்பாட்டை எடுக்கும்போது பேச வேண்டும். அவர் என்ன கொள்கையை எடுத்து வைக்கிறார் என்று தெரியாமல் எந்த கருத்தையும் சொல்ல முடியாது. பாஜகவை ஆதரிக்கும் முடிவை விஜய் எடுக்கமாட்டார். விஜய் நீங்கள் நினைப்பது போல் இல்லை, அவர் வரும்போது சரியான முடிவை எடுப்பார் என சீமான் தெரிவித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார்

இந்நிலையில் சென்னையில் இன்னொரு பேட்டியில் சீமான் பேசியதாவது:
தற்போதைய தலைமுறையினர் பெருமளவு விரும்பத்தக்கவராக தம்பி விஜய் அவர்கள் உச்சத்தில் இருக்கிறார். இந்த எதார்த்தச் சூழலை விளக்கி, அதுகுறித்த தனது கருத்துகளை ஊடகத்தில் தெரிவித்ததற்காக திரை விமர்சகரும், பத்திரிகையாளருமான சகோதரர் பிஸ்மி அவர்களது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்த முனைந்த திரு.ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களின் செயல் நாகரீகமானதன்று. தற்போது விஜய்தான் சூப்பர் ஸ்டார் என புகழ்ந்தார்.
இந்நிலையில் விக்கிரவாண்டிகள் விஜய் மாநாடு நடக்கும் முதல் நாளே விஜய்க்கு புகழ்ந்து மாநாடு வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்தார்.

விஜய் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதற்கு அடுத்த நாளே சீமான் தனது கொள்கையிலிருந்து விஜய் மாறிவிட்டதாக கையெடுத்து கும்பிட்டு கூட்டணி வேண்டாம் என்று ஒதுங்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மாநாட்டுக்குப் பின்பு தனது டோனை மாற்றிய சீமான் கூறியதாவது: விஜய் கொள்கையோடு என் கொள்கை ஒத்துவராது. விஜய் கூட்டணி கருவாட்டு சாம்பார் கூட்டணி. ஒருவர் முதுகுக்குப் பின்பாக நாம் செய்ய வேண்டியது தட்டிக் கொடுப்பது தான். விஜய் எடுத்து வைக்கும் கொள்கைகளை மக்கள் ஏற்க வேண்டும். அரசியல் கட்சி தொடங்கியதுமே அதிகாரத்திற்கு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. எம்ஜிஆர், என்டிஆரை பார்த்து எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் வந்தது விபத்து. விபத்து ஒருபோதும் விதியாகாது. எம்ஜிஆர் கட்சியை கட்டமைத்து வைத்திருந்ததால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

எம்ஜிஆரே கட்சித் தொடங்க பயந்தார். திமுகவில் இருந்து விலகிவிட்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிறகு, நடத்திப் பார்ப்போம் என கட்சி தொடங்கிவிட்டார். எம்ஜிஆரை பார்த்து என்டிஆர் தொடங்கினார். ஆனால் சிரஞ்சீவி, பவன் கல்யாணால் முடியவில்லை. விஜயகாந்த் வலிமையாக இருந்தார். ஆனால் தனித்து நிற்காமல் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததால்தான் சரிந்துவிட்டது. நின்று சண்டை செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றியை நெருங்க முடியும். என்றார்.
மேலும் அவர் கூறும் போது: கட்சி தொடங்கிய உடனே வெற்றி பெற்றால் அது பெரும் புரட்சி தான். ஆனால், அப்படியான நிலை இப்போது உள்ளதா என்பதை யோசிக்க வேண்டும். என்றார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், விஜய்யை நேரடியாக சாடினார். அவர் பேசும்போது, அது கொள்கை இல்லை. அழுகிய கூமுட்டை. ஒரு சாலையில் இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி வந்து மோதிவிடும். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி. நெஞ்சு டயலாக்.
நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். நான் குட்டிக் கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிதான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்கள் படித்து அதில் பி.ஹெச்டியே வாங்கிவிட்டோம்.

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ. அது கொள்கை அல்ல கூமுட்டை. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026ஆம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது. என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: கூட்டணி வைப்பார்கள் என்றால் இந்திரனே, சந்திரனே என்று புகழ்வது. கூட்டணி இல்லை என்றால் கூமுட்டை, அழுகிய முட்டை என வசை பாடுவது சீமானுக்கு கைவந்த கலையாகிவிட்டது. முன்பு விஜய்தான் சூப்பர் ஸ்டார், தமிழகத்துக்கு இவர் தான் விடிவெள்ளி என்றார். அது நல்லா வாய்… இது நார வாயா என வடிவேலு கேட்பது போல் உள்ளது. சீமானுக்கு தனது கட்சி தொண்டர்களை விஜய் இழுத்து விடுவாரோ என்ற பயம் திமுகவுக்கு வந்தது போல் வந்து விட்டது. கூட்டம் விஜய்க்கு கூடியது பார்த்து நயன்தாராவுக்கும், விமான சாகச நிகழ்ச்சிகள் தான் 15 லட்சம் பேர் கூடினார்கள்.

கூட்டத்தை வைத்து கூத்துக் காட்ட முடியுமா என்றும் பேசியுள்ளார். விஜயும் அரசியலில் ஆவேசமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. கருத்துக்களை கூறினால் மக்கள் கனிவுடன் கேட்பார்கள் என்று சீமானுக்கு மாநாட்டு மேடையில் ஒரு சூடும் போட்டுள்ளார். சூடு பட்ட பூனை சுள்ளொன்று கத்துவது போல் சீமான் கத்த கிளம்கி உள்ளார். சீமான் விஜயின் கொள்கை கூட்டணி இல்லாமல் சண்டையிடுவதைப் பார்த்து திமுகவும் அப்பாடா தொல்லை தீர்ந்தது என துண்டை மேலே தூக்கி போடா ஆரம்பித்துள்ளனர்.

சீமானின் சேட்டை பேச்சுகளுக்கு விஜய்யும் அவர் கட்சியினரும் எந்த பதிலும் கூறாமல் இருப்பது விஜய் சொல்வது மாதிரி செயலில் காட்டுவார்களா என தெரியவில்லை. இந்நிலையில் விஜய்யும் ஊர் ஊராக பிரச்சாரத்தை துவக்க இருக்கிறார். இதற்கான ரதம் தயாராகிவிட்டது. விஜய் ஆளுங்கட்சியை தாக்கும்போது. சீமான் விஜயை தாக்குவார். இதனால் ஆளுங்கட்சிக்கு ஒரு பேட்டரிஆக்ட் ஏவுகணையாக சீமான் மாறிவிட்டாரோ எனத் தோன்றுகிறது. காலங்கள் மாறலாம்… கொள்கையில் கொண்ட கோலங்கள் திமுகவை மாறி வரும்போது, சீமான் மாற மாட்டேன் என அடம் பிடிப்பது அரசியலை அலட்சியப்படுத்துவது ஆகும்.

இந்நிலையில் விஜயுடன் கூட்டணி வைப்பதில் விசிகாவும் மும்மரமாக உள்ளது. ஆட்சியில் பங்கு என்பது அர்த்தமுள்ள வார்த்தையாக விஜய் உதிர்த்து இருப்பதாக விசிகா கருதுகிறது. திமுக கூட்டணியில் 10 சீட்டு வாங்குவதைவிட. விஜய் கூட்டணியில் 20 சீட்டு வாங்கிவிடலாம் என கணக்கு போடுகிறது. மாநாட்டுக்கு முன்பு தம்பி , தம்பி என்று புழுங்காயிதமடைந்த சீமான். தற்போது போடா தும்பி, புழு மொய்க்கும் கூமுட்டை என கூவியிருப்பது அரசியலில் ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்நிலையில் சீமான் கூட்டணி இலக்கு இல்லாமல் செயல்படுவது. விளக்கு இல்லாமல் வழியில் நடப்பதற்கு சமம் ஆகிவிடும். விஜய் சீமானுக்கு பதில் சொல்லாமல் பதுங்குவதால் அவர் பதில் பக்குவமாக இருக்குமா.. இல்லை தத்துவமாக மாறுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 278

    0

    0