என்னது ‘மோடி இட்லி’யா…!!! சேலத்தை கலக்கி வரும் போஸ்டர்கள்…!
31 August 2020, 4:57 pmசேலத்தில் விரைவில் அறிமுகமாக இருக்கும் மோடி இட்லியின் விளம்பர போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
பொதுவாக சாதாரண உணவுகளுக்கும் அடைமொழி, புனைப் பெயர் வைப்பதன் மூலம் அந்த உணவுகளின் சுவை மாறுகிறதோ… இல்லையோ.., அதற்கான வரவேற்பு மக்களிடம் தாறுமாறாக இருப்பதை நாம் காண்பதுண்டு. அந்த வகையில், கொரோனா தொற்று காலத்தில் கொரோனா தோசை, மாஸ்க் புரோட்டா ஆகியவற்றை டிரெண்டுக்கு ஏற்றவாறு உருவாக்கி, தமிழகத்தையே மதுரை பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது ஒரு உணவகம்.
இந்த நிலையில், சேலம் மாநகர் பகுதியில் தற்போது புதிதாக மோடி இட்லியை அறிமுகம் செய்து அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பா.ஜ.க.வின் பிரச்சார அணி மாநில துணைத்தலைவர் மகேஷ். சேலம் டவுன், சின்ன கடை வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், செவ்வாய்பேட்டை, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ‘விரைவில் சேலத்து தாமரை நாயகன் மஹேஷ் வழங்கும் மோடி இட்லி.. 4 இட்லி ரூபாய் 10க்கு…சாம்பாருடன்’. அதி நவீன கருவிகள், சுகாதாரமானது, ஆரோக்கியமானது, சுவையானது, தரமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஃபேமஸான குஷ்பு இட்லியை இந்த மோடி இட்லி முறியடிக்குமா..? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
0
0