நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்…! ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

30 June 2020, 9:39 am
Quick Share

சென்னை: தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு ஆளாகி பின்னர் கொல்லப்பட்டனர் என்பது குற்றச்சாட்டாகும்.

தேசிய அளவில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று அறிவித்தார்.

இந் நிலையில், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நீதிபதியை தரக்குறைவாக பேசிய காவலர் மகாராஜன் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக உள்ளனர்.

Leave a Reply