கொரோனா தடுப்பு பணியில் தீவிரம்… ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய தனித்தனிக் குழு : தமிழக அரசு அதிரடி..!!!

22 April 2021, 3:17 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 6 பர் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை 25 ஆயிரத்தை எட்டியது. இதனிடையே, கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

மேலும், இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ள தமிழக அரசு, அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி பணிகளை கண்காணிக்க, கால்நடைத்துறை முதன்மை செயலாளர் கோபால் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகளுடன் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க பேரிடர் மேலாண்மைத்துறையின் முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தலைமையில் 6 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார், சட்டம் – ஒழுங்கு ஐ.ஜி. திருநாவுக்கரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்காணித்தல், தனிமைப்படுத்துதல் முகாம் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ், ஐஏஸ் அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி சென்று வருவதை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தை கண்காணிக்கவும், நிவாரண உதவி மற்றும் பொது நிவாரண நிதியை கண்காணிக்கவும், வெளிமாநில தொழிலாளர்கள், வயதானவர்கள், முதியோர்களுக்கு தேவையான வசதியைக் கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Views: - 60

0

0