நள்ளிரவில் அதிர்ச்சி.. பாஜக பிரமுகர் அதிரடி கைது : ஆக்ஷனில் இறங்கிய டெல்லி மேலிடம்!!!
தூத்துக்குடி மாநகரில் உள்ள புது கிராமம் பகுதியை சேர்ந்தவர் செளந்திரராஜன் இவரது மகன் ஜான் ரவி (52), தொழிலதிபர். இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் திமுகவினர் மற்றும் முதல்வரை விமர்சனம் செய்து வருவார்..
இந்நிலையில், கடந்த தினத்தில் இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் திமுக ஆட்சியை குறை சொல்வது, தமிழக முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பெரியார் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
இதில் பெரியார் குறித்து தகாதவாறு பதிவு செய்துள்ளார்.. இந்த நிலையில், மதுரை சைபர் கிரைம் போலீசார் சொந்த ஊரான தூத்துக்குடி புது கிராமத்தில் உள்ள இவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
(153A) மதம், இனம், ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், (504) சமூகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல், (505 1b) வதந்தியை பரப்புதல் ஆகிய பிரிவுகளில் கைது செய்துள்ளனர்..
மேலும், இவர் தனது தந்தை இறந்து சில நாட்களே ஆன நிலையில், 16ம் நாள் காரியம் செய்வதற்கு தூத்துக்குடி வந்துள்ளார். அப்போது தான் போலீசை இவரை கைது செய்தனர். மேலும், இவரை மதுரை மேஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார்…
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே போன்று சமூக வலைதளத்தில் முதல்வர் குறித்து தவறான தகவல் பதிவிட்டதால் குஜராத்திற்கு சென்று இவரை கைது செய்தது தமிழக போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ள பாஜக தேசிய தலைமை புதிய குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவானது தொடர்ச்சியாக எந்த காரணத்திற்காக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுகிறார்கள் என ஆய்வு செய்து கட்சி தலைமைக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
அந்த குழுவில் முன்னாள் கர்நாடக முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா, எம்பியும், மும்பையின் முன்னாள் காவல் கண்காணிப்பாளருமான சத்ய பால் சிங், ஆந்திரா பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, எம்பி பி.சி. மோகன் ஆகியோர் உள்ளனர். இந்த குழு பற்றிய விவரத்தை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டு இருந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.