தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்வு : மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான REPORT!!
Author: Udayachandran RadhaKrishnan11 October 2021, 10:43 am
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 193 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,71,607 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 30 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,39,71,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 193 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,50,782 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் 21,563 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,32,93,478 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,27,347 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 95,19,84,373 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
0
0