கவிஞர் வைரைமுத்துவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பிறந்த நாள் வாழத்து கூறியதை பாடகி சின்மயி விமர்சித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பெசன்ட் நகரில் உள்ள வைரமுத்துவின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தப் புகைப்படத்தை பகிர்ந்த பாடகி சின்மயி, சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது :- பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஒரு மனிதனின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பல விருதுகளை பெற்ற பாடகியான நான், MeToo இயக்கத்தின் மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்ததற்காக, 2018ம் ஆண்டு முதல் தமிழ் திரைத்துறையில் பணியாற்ற முடியாத சூழலை எதிர்கொண்டு இருக்கிறேன்.
நடத்தை கொண்ட அந்த கவிஞர், எந்தப் பெண்ணுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். பல அரசியல்வாதிகளுடன் குறிப்பாக திமுகவுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தால் சம்பந்தப்பட்ட பெண்களை அச்சுறுத்தினார். தமிழக அரசியல்வாதிகள் பெண்களின் பாதுகாப்புக்காக பேசுவதாக கூறுவது அவமானம். வைரமுத்துவைப் பற்றி பேச்சு எழும்போதெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் அமைதியாகி விடுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் வைரமுத்துவின் பிறந்தநாளில், சிறந்த தமிழ்ப் பெண்ணியப் பண்பாட்டில் உள்ள ஆண்களும், பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணைக் குறியிட்டு வயிறு எரியுதா? என்று சொல்கிறார்கள். இது, நமது அற்புதமான பலாத்கார மன்னிப்புக் கலாச்சாரம். இங்கே அவர்கள் பாலியல் குற்றவாளிகளைக் கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு எதிராக பேசும் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள்.
பிரிஜ் பூஷன் முதல் வைரமுத்து வரை அனைவரும் எப்போதும் தப்பித்து விடுவார்கள், ஏனென்றால் அரசியல்வாதிகள் இவர்களைப் பாதுகாப்பார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.