தமிழகத்துக்கு தனிக்கொடி.. போர்க்கொடி உயர்த்தும் விசிக! மத்திய அரசுக்கு விடுக்கும் சவாலா?

4 July 2021, 1:00 pm
VCK - Updatenews360
Quick Share

2021 சட்டப் பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்களை கைப்பற்றியது. அந்த கூட்டணியில், தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று கடைசி வரை பிடிவாதம் காட்டி அதை விசிக சாதித்தும் காட்டியது.

Case booked against Tamil Nadu MP for 'derogatory remarks' on women |  Deccan Herald

இத்தனைக்கும் திமுக கூட்டணியில் விசிகவை விட மூத்த கட்சியான மதிமுகவுக்கும் அதே
6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

முதலில் மதிமுகவும், திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கினாலும் எங்கள் சின்னமான பம்பரத்தில்தான் போட்டியிடுவோம் என்று உறுதியாக இருந்தது. ஆனால் நெருக்கடிகள் அதிகரித்ததால் கடைசியில் திமுக சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய கட்டாயம் வைகோவுக்கு நேர்ந்தது.

Is Thirumavalavan playing the Panchami land card to checkmate Stalin? - The  Federal

தமிழகத்தில் கட்சியை வளர்க்க வேண்டும், சட்டப்பேரவையில் தங்களுக்கென்று ஒரு தனி அங்கீகாரம் தேவை என்பதற்காகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இதுபோல கறார் காட்டினார் என்பார்கள்.

தேர்தலுக்குப் பிறகு மாநிலதுக்கு எதிரான அரசியல் இல்லாமல் போய் விட்டதால் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

அதே நேரம் சமீபகாலமாக மத்திய அரசை திமுக அமைச்சர்களும், திமுகவினரும் ஒன்றிய அரசு என தொடர்ந்து கூறி வருவதால் விசிகவும் அதை அப்படியே கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டது. அதன் பிறகு ஜெய்ஹிந்த் நீக்கத்திற்கு ஆதரவான கருத்துகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது.

இதெல்லாம் பிரிவினைவாத சிந்தனையாக தோன்றுகிறதே? என்று கேள்வி எழுப்பினால், அது உங்கள் பார்வையில் உள்ள கோளாறு என்று பதில் கூறும் விசிக தலைவர்கள் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டுக்கென்று தனிக்கொடி தேவை என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

இது போன்றதொரு கோரிக்கையை கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் மூலம் முன் வைத்தார்.

seeman edappadi palanisamy dealing: சீமான் - எடப்பாடி பழனிசாமி ரகசிய  டீலிங்? - naam tamilar katchi seeman edappadi palanisamy secret dealing |  Samayam Tamil

அதில் “தமிழ்நாடு உருவான தினமான நவம்பர் 1-ம் நாளினை அரசு விடுமுறையாக அறிவித்து, தமிழக மூவேந்தர்களின் கொடிகளைப் பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை மாநிலமெங்கும் அரசு அலுவலகங்களில் ஏற்றி எல்லை மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தவேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஆனால் தனிக்கொடி என்பதை அதிமுக எந்தக் காலத்திலும் சிந்தித்தது இல்லை. ஏனென்றால் அது நாட்டின் இறையாண்மை சார்ந்த விஷயம். இந்தியாவுக்கென்று தேசியக்கொடி இருக்கும்போது, தமிழகத்திற்கு தனிக்கொடி என்ற பேச்சே தேவையற்றது. அது பிரிவினை வாதத்துக்குத்தான் வழி வகுக்கும் என்பதால் சீமான் சொன்னதை எடப்பாடி பழனிசாமி காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

மெடிக்கல் உரிமையாளரை மாமூல் கேட்டு மிரட்டியவர் விசிகவை சேர்ந்தவர் அல்ல -  வன்னியரசு | The arrested Silambarasan is not a member of the VCK-  Vanniyarasu | Puthiyathalaimurai - Tamil ...

தற்போது விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தமிழகத்தில் தனிக்கொடி என்பது குறித்து விரிவான கருத்துகளை கூறி வருகிறார். 20 ஆண்டு கட்சியான விசிகவுக்கு முன்பு அப்படியொரு சிந்தனை இருந்தபோதிலும் அது அவ்வளவு தீவிரமாக வெளிப்படவில்லை. இப்போது பரந்து விரிந்த அளவில் அதுபற்றி பேசுகிறார்.

சரி, வன்னியரசு தனிக்கொடி குறித்து சொல்வதென்ன?…

“தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும் என்கிற கோரிக்கை எழுவது இது முதல் முறை அல்ல.
1970-ம் ஆண்டு டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தனிக்கொடி கோரிக்கையை முன்வைத்தார். அவர் அறிமுகம் செய்த தேசியக் கொடியில் தமிழ்நாடு அரசின் கோபுர இலச்சினையும் இடம்பெற்றிருந்தது.

Shilpa⚡️ on Twitter: "Will Kalaignar & Gandhis get together again?  #TamilNadu CM Karunanidhi & PM Indira Gandhi 1969 http://t.co/WlsVQX4WHZ  via @IndiaHistorypic"

அதேபோல், சி.பா.ஆதித்தனார், பழ.நெடுமாறன் ஆகியோரும் தனிக்கொடி பற்றி பல நேரங்களில் பேசி இருக்கின்றனர். 2010-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழர் இறையாண்மை மாநாட்டிலும் தமிழர்களுக்கான தனிக்கொடி அறிமுகம் செய்யப்பட்டது. தனிக்கொடி என்பது தேசிய இனங்களின் உரிமை இது தொடர்பாக, எங்கள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வலியுறுத்துவோம்” என்கிறார்.

இதுபற்றி டெல்லி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்பு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு மையப் புள்ளியை நோக்கியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகின்றன. முதலில் ஒன்றிய அரசு என்று சொன்னார்கள். அதை மத்திய பாஜக அரசு அவ்வளவாக ரசிக்கவில்லை. அதேநேரம், ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் முழக்கம் நீக்கப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன் அதுபற்றி பெருமையுடன் பேசியதற்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் தக்க பதிலடி கொடுத்து இருக்கவேண்டும் என்று கருதுகிறார். ஒன்றிய அரசு, ஜெய்ஹிந்த் நீக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி பற்றி குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் பேசுகின்றன என்று மத்திய அரசு நினைக்கிறது.

ஜெய்ஹிந்த் விவகாரம்' - நான் பேசியது மொழி சார்ந்து மட்டுமே: ஈஸ்வரன்  எம்.எல்.ஏ விளக்கம் | 'Jaihind issue' - I spoke only on the basis of  language: Eswaran MLA Explanation ...

அதுவும் தமிழ்நாட்டின் இறையான்மை என்று அவர்கள் கூறுவதை பாஜக பிரிவினைவாத போக்கிற்கு ஊக்கமளிக்கும் ஒரு கருத்தாகத்தான் பார்க்கிறது. மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் அதை கருதுகிறது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இதுபோன்ற தனிக்கொடி, இறையாண்மை போன்ற கோஷங்களை விரும்பாது.

நாட்டை துண்டாட விரும்பும் சில அந்நிய ஊடகங்களும், 2 வெளிநாடுகளும் இதன் பின்னணியில் இருப்பதாக மத்திய பாஜக அரசு சந்தேகிக்கிறது. இதுபோன்ற சிந்தனைகள் மக்களிடம் விதைக்கப்படுவதை தடுக்க பாஜக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் ” என்றனர்.

Views: - 189

1

0