இளைஞரிடம் ரூ.10 லட்சம் பறித்துச் சென்ற பெண் காவல் ஆய்வாளர்.. ஒன்றரை மாதத்திற்கு பிறகு தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்

Author: Babu Lakshmanan
27 August 2021, 12:47 pm
arrest - updatenews360
Quick Share

இளைஞரிடம் ரூ. 10 லட்சம் லழிப்பறி செய்துச் சென்ற பெண் காவல் ஆய்வாளரை தனிப்படை போலீசார் ஒன்றரை மாதத்திற்கு பிறகு கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்சத். இவர், பை தயாரிக்கும் நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வாங்க ரூ.10 லட்சத்துடன் கடந்த 5ம் தேதி மதுரை வந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த பெண் காவல் ஆய்வாளர் வசந்தி உள்பட 5 பேர் அர்சத்திடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, அதிர்ந்து போன அர்சத், மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், காவல் ஆய்வாளர் வசந்தி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி, பால்பாண்டி, பாண்டியாஜன் உள்ளிட்டோர் பணத்தை பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அமைக்கப்பட்ட தனிப்படையின் மூலம் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த வசந்தியை தேடி வந்தனர். இந்த நிலையில், அவரை தற்போது கைது செய்துள்ளனர்.

Views: - 354

0

0