திருப்பத்தூரில் தி.மு.க.வின் அச்சாணியை கழற்றிய மருது அழகுராஜ்..! விழிக்கும் பெரிய கருப்பண்..!

7 September 2020, 6:22 pm
maruthu alagau raj 5- updatenews360
Quick Share

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருப்பது சிவகங்கை. இங்குள்ள மக்களிடம் அரசியல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், தேர்தல் சமயத்தில், கொடையை அள்ளிக் கொடுக்கும் கட்சியினருக்கு தங்களின் வாக்குகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். கட்டப்பஞ்சாயத்து செய்து, இளைஞர்களை தங்களின் கைக்குள் போட்டுக் கொண்டு, தங்களின் வயிற்றை நிரப்பி வரும் அரசியல் தலைவர்களே அதிகம் காணப்படுகின்றனர். இதனால், அரசியல் கட்சிகள் மற்றும் சுரண்டும் அரசியல் தலைவர்களினால் அங்குள்ள மக்கள் வெறுத்துப் போயுள்ளனர்.

இப்படியிருக்க, தனது சொந்த மண்ணான சிவகங்கைக்கு விஜயம் செய்த அதிமுக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருமான மருது அழகு ராஜுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. இத்தனை நாட்கள் சொந்த ஊர் மக்கள் ஏமாற்றப்பட்டதையும், அவர்களுக்கு எந்தவொரு அரசின் பலன்களையும் கிடைக்க வழிவகை செய்யாமல், வெறும் சுயநல அரசியலை நடத்தி வருவதைக் கண்டு, அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவு செய்தார்.

அந்த சமயம் தான் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஆரம்பித்தது. ஏற்கனவே, அரசியல்வாதிகளால் பாவப்பட்டு போன, மக்களுக்கு கொரோனா தொற்று பெரும் குடைச்சலை ஏற்படுத்தியது. இதனை கண்ட மருது அழகு ராஜ், தமிழகத்தில் முதல்முறையாக, நிவாரணப் பொருட்களை கொடுக்க ஆரம்பித்தார். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், தனது சொந்த பணத்தில் இருந்து தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருவதை கண்டு மக்கள் மனமகிழ்ந்து போகினர்.

அன்று முதல் இன்று வரை தனது உழைப்பினாலும், மகனின் வருமானத்திலும் சேர்த்து வைக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ. 3 கோடி வரை கொரோனா நிவாரணத்திற்காக வழங்கினார்.

இது கடந்த 3 முறை திருப்பத்தூர் எம்.எல்.ஏ.வாக இருந்த பெரிய கருப்பனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஏதும் செய்யாமலே, சில அறிவிப்புகளும், நன்கொடைகளாலும் கைக்குள் வைத்திருந்த மக்களை, இப்படி அதிரடி நடவடிக்கைகளால் மாற்றி விட்டாரே என மருது அழகுராஜ் மீது அவருக்கு அதிருப்தியும் உண்டாகியிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, திருப்பத்தூரில் 40 ஆண்டுகளாக தி.மு.க. பேச்சாளராகவும், கருணாநிதி சிறை சென்ற போது, அவருக்காக தீக்குளித்தவருமான சாமிநாதன், மருது அழகுராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தது தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“கருணாநிதிக்காக தீக்குளிக்கும் அளவிற்கு தி.மு.க. மீது பற்றுக் கொண்ட நான், மருது அழகுராஜின் தொண்டினை பார்த்து கவர்ந்து போனேன். எனவே, எனது தலைமையில் சுமார் 60 பேர் அ,தி.மு.க.வில் இணைந்தேன்,” என்றார் சாமிநாதன்.

மருது அழகுராஜின் சேவை மற்றும் அணுகுமுறையினால் 26 ஆண்டுகளாக தி.மு.க.வில் இருந்த ஜெகநாதன், காங்கிரஸ் முக்கிய பிரமுகரும், கல்லல் ஒன்றிய துணை சேர்மன் கொங்கரத்தி நாராயணன், தி.மு.க. எம்.எல்.ஏ. பெரிய கருப்பனின் உறவுக்காரர் ஞானசேகர், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என 300 பேர் தன்னெழுச்சியாக அ.தி.மு.க.வில் ஐக்கியமாகியுள்ளனர்.

“கடந்த 3 முறை தி.மு.க. உறுப்பினரே வெற்றி பெற்றதால் அ.தி.மு.க.வினராகிய நாங்கள் சோர்வடைந்து விட்டோம். இந்த முறை அண்ணன் மருது அழகுராஜின் செயலால், நாங்கள் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். தி.மு.க.வினரே அ.தி.மு.க.விற்குதான் எங்களின் வாக்கு என அண்ணனிடம் உறுதி கூறி வருகின்றனர். இந்த முறை திருப்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வசம் வரும்,” என்கிறார் அ.திமு.க. நிர்வாகி ஒருவர்.

Views: - 5

0

0